Sunday, May 26, 2013

மீல் மேக்கர் (சோயா உருண்டை) வடை / Mealmaker Vadai




தேவையான பொருட்கள் ;
சோயா உருண்டைகள் - 20 எண்ணிக்கை
கடலை பருப்பு - 100 கிராம் (ஊறவைக்கவும்)
நறுக்கிய பச்சை மிளகாய் - 2
நறுக்கிய மல்லி புதினா - சிறிது
இஞ்சி சிறிய துண்டு - பூண்டு - 3 பல்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
சோம்புதூள் - கால் - அரை டீஸ்பூன்
கரம் மசாலா -கால்-  அரை டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவைக்கு.

செய்முறை:
கடலை பருப்பை  4 மணி நேரம் அல்லது .குறைந்தது 2 மணிநேரமாவது ஊறவைக்கவும். சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் போடவும்.அது உப்பி வரும்.கால் மணி நேரம் கழித்து கொதி நீரை வடித்து விட்டு நீரை சுத்தமாக கையால் பிழிந்து சோயா உருண்டைகளை எடுக்கவும்.
மிக்ஸி ஜாரில் முதலில் ஊறிய பருப்பை பரபரப்பாக அரைத்து எடுத்து ஒரு பவுலில் வைக்கவும்.
அடுத்து சோயா உரூண்டைகளுடன் நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து அரைத்து எடுத்து பவுலில் வைக்கவும்.


பொடியாக வெங்காயம்,பச்சை மிளகாய், மல்லி,புதினா நறுக்கி கொள்ளவும்.அதனையும் அரைத்த பருப்பு,சோயா உருண்டைகளுடன்  சேர்க்கவும்.அத்துடன் மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள்,சோம்புத்தூள்,கரம் மசாலா சேர்க்கவும்.தேவைக்கு உப்பும் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.



 வாணலியில் தேவைக்கு எண்ணெய் சூடு செய்யவும்.
எண்ணெய்  சூடானவுடன் அடுப்பை மீடியமாக குறைக்கவும்.
கலந்து வைத்ததை வடைகளாக தட்டி போடவும்.இரு பக்கமும் பொன்முறுகலாக சிவந்து வரும் பொழுது எண்ணெய் வடித்து எடுக்கவும்./
 இப்படியே தட்டிய அனைத்து வடைகளையும் பொரித்து எடுக்கவும்.


சுவையான மீல் மேக்கர் வடை ரெடி.பக்குவமாக பொரித்து எடுக்கவும். இது கொத்து கறி வடை போலவே சூப்பராக இருக்கும்.
பருப்பிலும்,சோயாவிலும் அரைக்கும் பொழுது சுத்தமாக தண்ணீரே இருக்கக் கூடாது.அப்பொழுது தான் எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுப்பாக இருக்கும்.

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ருசியான மீல் மேக்கர் வடை அருமை... நன்றி சகோதரி...

athira said...

ஆ சூப்பரா இருக்கு, எனக்கு இப்படியே இதில் வடக்கறி செய்யலாமே எனவும் யோசனை வருதே..

Priya Suresh said...

Super crispy vadas Akka, i do add mealmaker with vada batter, looks wonderful.

Aasai said...

``தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.

Nivedhanams Sowmya said...

ippove sapidanum pola irukku.... very tasty and very delicious... Thanks for sending this yummy recipe to my event.. Looking for more yummy recipes...

Sowmya
Event - Authentic Indian Sweets w giveaway
Event - Kid's delight - Sweet Treats
Event - WTML w giveaway